அபுதாபியில் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூருடன் இன்று கொல்கத்தா மோதல்: பதிலடி தருமா கொல்கத்தா?

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்,  அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 39வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.  பெங்களூரு 9 போட்டியில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. பிஞ்ச், படிக்கல், கோஹ்லியுடன் டிவில்லியர்ஸ் அதிரடியில் மிரட்டுகிறார். பந்துவீச்சில் மோரீஸ்,  சைனி, சாஹல் வலு சேர்க்கின்றனர்.இன்று வெற்றி பெற்று 2வது இடத்திற்கு முன்னேற  பெங்களூரு முயலும். மறுபுறம் கொல்கத்தா 10 போட்டியில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது.  

பேட்டிங்கில் ரஸ்சல் தடுமாறி வருகிறார். கில், ரானா, தினேஷ்கார்த்திக், மோர்கன்  நிலையான ஆட்டத்தை தொடரவில்லை. பந்து வீச்சு சர்ச்சைக்கு பின் நரேன் இன்று களம் இறங்குகிறார்.  பெர்குசன் பந்து

வீச்சில் மிரட்டுகிறார். கடந்த 12ம் தேதி இரு அணிகளும்மோதிய போட்டியில்  பெங்களூரு 82 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பழிதீர்க்க கொல்கத்தா போராடும். இரு அணிகளும் இதுவரை  25 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 14ல் கொல்கத்தா, 11ல் பெங்களூரு வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 ஆட்டத்தில் 3ல் கொல்கத்தா வென்றுள்ளது.

Related Stories:

>