கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசம் ஆயுதப்படை போலீசுக்கு அடி, உதை: மனைவியிடம் கையும் களவுமாக சிக்கினர்

திருமலை: தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம், பத்ராச்சலம் நகரை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி (பெயர் மாற்றம்).  இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளன. சமீப காலமாக கணவரின் நடவடிக்கையில் மாலதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து கண்காணித்ததில் கணவர் சுபாசுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள லாட்ஜிக்கு சுபாஷ் சென்றதைப் பார்த்த மாலதி, அவரை பின்தொடர்ந்து ரகசியமாக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் சுபாஷ் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தாராம். இதனால் கடும் ஆத்திரமடைந்த மாலதி, அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து செருப்பு மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பி ஓடினர்.

இதுகுறித்து பத்ராத்திரி கொத்தகூடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த ஆயுதப்படை காவலருக்கு சரமாரி அடி, உதை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>