×

பிரதமர் மோடி உரைக்கு சில நிமிடங்களிலேயே 4,500 டிஸ்லைக்குகள் குவிந்ததால் யூ- டியூபில் லைக், டிஸ்லைக் பட்டன்களை அணைத்தது பாஜக!!

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது இந்தியாவில் திருவிழாக் காலம் தொடங்கி உள்ளதால், இந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.இந்த நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து மோடியின் காணொளி சமூக ஊடகங்களில் விவாதப் பொருள் ஆகியது. அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4500 க்கும் அதிகமான முறையில் அந்த காணொளி காட்சியில் டிஸ் லைக் செய்யப்பட்டது. அதனால் அந்த காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அனைத்து வைக்கப்பட்டன. இதற்கு முன்னதாக கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் லட்சக்கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP ,Modi ,speech , Prime Minister Modi, speech ,, BJP
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு