×

5 போலீஸ்காரர்களால் 20 வயது இளம் பெண் 10 நாட்கள் லாக்கப்பில் கதற கதற பலாத்காரம் : மத்திய பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

போபால்: மத்திய பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ்கார்கள் 5 பேர் சேர்ந்து, 20 வயது இளம் பெண்ணை அறையில் பூட்டி வைத்து 10 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சினிமாவை மிஞ்சும் சம்பவம் ஒன்று நடந்ததாக பரபரப்பு எழுந்தது.மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாங்கவன் போலீஸ் ஸ்டேசன் லாக் அப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ்காரர்கள் சேர்ந்து 20 வயது இளம் பெண்ணை கடந்த மே மாதத்தில் 10 நாட்கள் தொடர்ந்து அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார் இப்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இளம் பெண் போலீஸ்கார்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த அக்டோபர் 10ம் தேதி தான் முதல்முதலாக வெளி உலகிற்கு தெரிந்தது. அக்டோபர் 10 ம் தேதி சிறைச்சாலை ஆய்வுக்காக கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் குழு சென்றிருந்த போது தான் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்திகளின்படி, அந்த பெண் கூடுதல் மாவட்ட நீதிபதி முன் போலீசார் மீது குற்றச்சாட்டுகளை கூறி கதறி அழுதுள்ளார் .நீதிபதியிடம் அவர் சொன்ன தகவலின்படி, அந்த இளம் பெண் மே 9 மற்றும் மே 21 க்கு இடையில் காவல் நிலையத்தில் ஐந்து போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாராம். அதை அங்கிருந்து ஒரு பெண் கான்ஸ்டபிள் எதிர்த்துள்ளார். அதையும் மீறி தனக்கு கொடுமை நடந்திருக்கிறதாக கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம்,மத்திய பிரதேச அரசு, மாநில காவல்துறை மற்றும் சிறைத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரம் டிஜிபிக்கு கீழ் இல்லாத ஒரு மூத்த போலீஸ் அதிகாரியால் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியது.

Tags : lockup ,policemen ,government ,Madhya Pradesh ,National Human Rights Commission , Police cars, rape, Madhya Pradesh, government, National Human Rights Commission, notice
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்