×

ரேஷன் அரிசி கடத்தியவர்கள் பொன்னி அரிசியை காப்பகத்திற்கு வழங்க வேண்டும் : நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!

மதுரை,:ரேஷன் அரிசி கடத்தியவர்கள் காப்பகத்திற்கு நயம் பொன்னி அரிசி வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை நிபந்தனை விதித்துள்ளது.திருச்சியைச் சேர்ந்த வினோத் குமார் மற்றும் அய்யப்பன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தியதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், ரேஷன் அரிசி கடத்தியதற்காக வினோத்குமார் மதுரை உத்தங்குடியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்திற்கு 25 பை (தலா 50 கிலோ) நயம் பொன்னி அரிசியும், அய்யப்பன் மதுரை அன்பகம் காப்பகத்திற்கு 15 பை(தலா 50 கிலோ) நயம் பொன்னி அரிசியும் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.


Tags : Ration rice smugglers ,Judges ,Ponni , Ration Rice, Ponni Rice, Judges, Action, Order
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...