திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.: முறையான ஊதியம் வழங்க கோரிக்கை

திருப்பூர்:  திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை என கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.510 வழங்கிட வேண்டும். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் குறைவாகவே வழங்குகிறது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ரூ.510 தினசரி ஊதியம் வழங்கிட வேண்டும். மாதாமாதம் 10-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை சாய்த்துள்ளனர். மேலும் தீபாவளிக்கு நியாயமான போனஸ் வழங்க வேண்டும் என்று,  நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>