கார் கவிழ்ந்து விபத்து

மாமல்லபுரம்: சென்னையில் இருந்து நேற்று மாலை புதுச்சேரி நோக்கி, மாமல்லபுரம் இசிஆர் சாலையில் ஒரு கார், தனியார் ரிசார்ட் அருகே வந்தது. அப்போது, பின்னால் வந்த வேனுக்கு வழி விடுவதற்காக, கார் சாலையோரம் ஒதுங்கியது. இதில், எதிர்பாராத விதமாக கார் சாலையோர தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. அந்த, காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஒரு காதல் ஜோடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்குள்ளான காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>