×

காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய பாஜ அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி  காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கினார். நகர தலைவர் இராம.நீராளன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் வேளாண் சட்டத்தின்மூலம் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து அடிமை ஆக்கப்படுவார்கள். எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், வீரபத்திரன், சடையாண்டி, லோகநாதன், ரவி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Tags : Congress ,parties , Signature movement of Congress parties
× RELATED வேளாண் மசோதா ரத்து கோரி காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்