×

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியைத் தாண்டியது

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியைத் தாண்டியுள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,10,22,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,06,16,552 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 28 ஆயிரத்து 877 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 92 லட்சத்து 76 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76 ஆயிரத்து 851 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 85,19,467, உயிரிழப்பு - 2,26,120, குணமடைந்தோர் - 55,43,053
இந்தியா       -    பாதிப்பு - 76,49,158, உயிரிழப்பு - 1,15,950, குணமடைந்தோர் - 67,92,550
பிரேசில்       -    பாதிப்பு - 52,74,817, உயிரிழப்பு - 1,54,888, குணமடைந்தோர் - 47,21,593
ரஷியா        -    பாதிப்பு - 14,31,635, உயிரிழப்பு -   24,635, குணமடைந்தோர் - 10,85,608
ஸ்பெயின்    -     பாதிப்பு -  10,29,668, உயிரிழப்பு -  34,210

Tags : World, corona, mortality
× RELATED கர்நாடகாவில் பகல் 1 மணி நிலவரப்படி 38.23%...