தீவைத்து ஆட்டோ எரிப்பு

ஆவடி: திருமுல்லைவாயல் அன்னை இந்திராநகர் 2வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(42). சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி  வருகிறார். நேற்று முன்தினம் இரவு சவாரி முடிந்து ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். பின்னர், நள்ளிரவு 12.30 மணியளவில் சத்தம்  கேட்டு அவர் வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது, அங்கு அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில், ஆட்டோவின் கூரை, இருக்கை  உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து சிசிடிவி கேமராவில்  பதிவான மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>