×

பிளாஸ்டிக் கம்பெனியில் தீ

துரைப்பாக்கம்: காரப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. நேற்று  அதிகாலை 2 மணியளவில் இந்த கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து துரைப்பாக்கம், திருவான்மியூர், தேனாம்பேட்டை,  சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த  இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்த புகாரின்பேரில்,  கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு  காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது சதிவேலை காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : company , Fire in the plastic company
× RELATED கார்த்திகை தீபத்திருவிழாவை...