×

சீனாவை எதிர்த்து பேச பிரதமர் மோடி பயப்படுகிறார்: வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘‘இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சீனாவை எதிர்த்து பேச பிரதமர் மோடி பயப்படுகிறார்’’ என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான  ராகுல்காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்ெகாண்டுள்ளார்.  நேற்று காலை அவர், வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றார்.  தொடர்ந்து  ராகுல்காந்தி  நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி தனக்கு  வேண்டிய ஓரிரு பெரிய தொழிலதிபர்களுக்கு வழி திறப்பதற்காக விவசாய கலாசாரத்தை   தகர்க்கிறார். விவசாயிகளுக்கு உதவ  தேசிய அளவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பஞ்சாப் அரசு மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். விவசாயிகள் தான் நாட்டின்  உணவு பாதுகாப்பை  உறுதிப்படுத்துகின்றனர். அவர்கள் தான் நாட்டின்  முதுகெலும்பு. ஆனால் இது தெரியாமல் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை  மத்திய அரசு  தீட்டுகிறது. இந்திய  எல்லைக்குள் அத்துமீறிய சீன ராணுவம் இப்போதும் அதே பகுதியில் நிலை  கொண்டுள்ளது. இது எப்படி நடந்தது என்பது  குறித்து பிரதமர் விளக்கவேண்டும்.  நமது 12 ஆயிரம் சதுர கிேலாமீட்டர் நிலத்தை சீனா கையகப்படுத்தியுள்ளது.  சீனாவுக்கு எதிராக பேச மோடி  பயப்படுகிறார்.

கொரோனாவை  தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் சீர்  குலைந்துவிட்டது. இதுகுறித்து பிரதமர் ஒரு  வார்த்தை கூட பேச  மறுக்கிறார்.  பத்திரிகைகள், அரசியல் அமைப்பு நிறுவனங்ளையும் அழித்து வருகிறார்.  மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த  பா.ஜ.  முயல்கிறது. நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க ெதாடங்கப்பட்ட சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை அரசியல்  ஆயுதமாக்கி தங்களுக்கு  கட்டுப்படாதவர்களை மிரட்டுகின்றனர். மத்திய விசாரணை அமைப்புகள் பிரதமரின் தனிப்பட்ட சொத்தல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,China ,Wayanad ,Rahul Gandhi , Prime Minister Modi is afraid to speak out against China: Rahul Gandhi allegation in Wayanad
× RELATED உணர்ச்சிகளை தூண்டும் மதங்களை பற்றி...