×

முதல்வருடன் திரையரங்கு உரிமையாளர்கள் சந்திப்பு: தியேட்டர்களை திறக்க கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. இதனால் திரையுலகம் முடங்கி உள்ளது. 100 பேருடன்  படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ள போதும் தியேட்டர்களை திறக்க அனுமதிக்கவில்லை. தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி  வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசும் அனுமதி தர வேண்டும் என திரையுலகினர் கோரி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர்  உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம், பொருளாளர் இளங்கோவன், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளனத்  தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் தலைமையில் தியேட்டர் அதிபர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நேற்று சந்தித்து  பேசினார்கள்.

தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதித்திருப்பது போன்று தியேட்டரையும் திறக்க அனுமதிக்க வேண்டும். அரசின்  வழிகாட்டுதல்படி தியேட்டர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவோம் என்று அவர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர். ‘திரையரங்குகள்  குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க முடியவில்லை. வரும் 28ம் தேதி இது தொடர்பாக சுகாதாரா குழு கூட்டத்தில்  விவாதித்து முடிவெடுக்கப்படும்’ என்று முதல்வர் உறுதி அளித்தார். இதனால் நவம்பர் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.

Tags : Theater Owners Meeting , Theater Owners Meeting with the First: Request to Open Theaters
× RELATED அமேசான், நெட்பிளிக்ஸ் 100 நாட்கள் வரை...