×

தமிழ்நாட்டுக்கு தனி கொடி அறிவிக்க அரசுக்கு கோரிக்கை

சென்னை: மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைகழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை உள்ளடக்கிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் வெள்ளை நிறக்கொடியில் தமிழ்நாடு வரைபடம் சிவப்பு வண்ணத்தில் அமையும் வகையில் தமிழ்நாட்டு கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: நவம்பர் முதல் நாளை, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கும் தனி கொடியை அரசு அடையாளப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

Tags : Government ,Tamil Nadu , Request to the Government to declare a separate flag for Tamil Nadu
× RELATED தமிழக அரசுக்கும், தமிழக...