×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,094 ஆக குறைந்தது

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 80,371 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3,094 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 857 பேர். நேற்று மட்டும் 4,403 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 6,46,555 பேர் குணமடைந்துள்ளனர். 36 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Tamil Nadu , In Tamil Nadu, the incidence of corona has dropped to 3,094
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து...