×

நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை; தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. OMR சீட்டு மாறியதாக தகவல் வெளியான நிலையில் தேசிய தேர்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் திரிபுராவில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3,536 பேர், ஆனால் வெளியான அறிவிப்பில் 88,889 பேர் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. தெலங்கானாவில் 50,392 பேர் எழுதி 1,738 பேர் தேர்ச்சி ஆன நிலையில் தேர்ச்சி சதவீதம் 49.15% என்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதி 7,323 தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தேர்ச்சி சதவீதம் 60.79% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதி 37,301 பேர் தேர்ச்சி என குளறுபடிகளோடு முடிவு வெளியாகி இருக்கிறது.

இதுமட்டுமின்றி 2020 ஆகஸ்ட் மாதம் தேசிய தேர்வு முகமை வெளியட்ட அறிக்கையில் இரகூகும் மாநில அளவில் 2019, 2020 நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் தற்போது வெளியாகி உள்ள முடிவில் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையிலும் மாற்றம் உள்ளது. 2020 நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அதற்கு பின்பு தேர்வு முகமை மீண்டும் நீட் நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : end ,National Selection Agency , At the end of the NEET exam, messy, misinformed, national selection agency
× RELATED கோடைகால நோய்கள்…