முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26-ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும்: ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26-ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் 144 தடை அமலில் இருப்பதால் கூட்டமாக வரக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி 113 ஜெயந்தி விழா மற்றும் 58 குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது.

ஏராளமானவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் இந்தாண்டு கொரானோ நோய் தொற்று உள்ளதால் விழா கட்டுப்பாடு களுடன் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்த வர உள்ளனர். மேலும் வரக்கூடிய பொதுமக்களின் பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகனன், மாவட்ட எஸ்.பி. கார்த்திக்  தேவர் நினைவிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் பொது மக்கள் வரும் பாதை, முக்கிய பிரமுகர்கள் வரும் பாதையில் மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கடந்த வாரம் அய்வு நடத்தினர்.

Related Stories:

>