×

சொந்த ஊரில் தோற்றவனுக்கு வாழ உரிமை இல்லை.. முகத்தை வெளியே காட்ட முடியாது..! : மத்திய பாஜ அமைச்சரை அலறவிட்ட மக்கள்

பாட்னா, -‘சொந்த ஊரில் தோற்றவனுக்கு வாழ உரிமை இல்லை. ேதர்தலில் ேதாற்றால் முகத்தை வெளியே காட்ட முடியாது மக்களே’ என்று பீகாரில் பேசிய மத்திய பாஜ அமைச்சருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டனர். பீகார் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் மத்திய, மாநில அமைச்சர்கள் குறிப்பிட்ட தொகுதிகளில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அதுவும், பீகாரை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தங்களது சொந்த மாநிலத்தில் வெற்றிவாய்ப்பை தக்கவைக்க தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் (பாஜக) நித்யானந்தா ராய், பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவரது பேச்சை தொடங்கிய போது, அங்கிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர், அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இருந்தும் கூட்டத்தில் உரையாற்றிய நித்யானந்தா ராய், ‘பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வளர்ச்சி பாதையில் செல்கிறது. மீண்டும், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். பீகார் மக்களால் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது’ என்றார். அப்போது, அவருக்கு எதிராக குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன.

ஒரு கட்டத்தில் மேடையில் இருந்த நித்யானந்தா ராய், சில சுலோகங்களை படிக்க ஆரம்பித்தார். பின்னர், ‘நான் பாதுகாப்புடன் செல்ல உங்களிடம் கெஞ்சுகிறேன். விட்டுவிடுங்கள்... கூச்சல் போடாதீர்கள். ஆண்டவா... எதிர்க்கட்சிக்கு அறிவைக் கொடுங்கள். அவர்கள் இதுபோன்ற தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்’ என்றார். சிறிது நேரத்தில் பிரசார கூட்டம் முடிக்கப்பட்டதால் அங்கிருந்து நித்யானந்தா ராய் கிளம்பினார்.
இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிய நித்யானந்தா ராய், ‘என்னைக் காப்பாற்றுங்கள். எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி விடாதீர்கள். என்னால் வெளியே முகத்தைக் காட்ட முடியாது.

எனது சொந்த மாவட்டமான வைசாலியில் உள்ள எட்டு இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெல்ல வேண்டும். எனது நற்பெயர் உங்கள் கைகளில் உள்ளது. சொந்த ஊரில் தோற்றவனுக்கு கண்ணியத்துடன் வாழ உரிமை இல்லை’ என்றார். அமைச்சர் நித்யானந்தா ராய் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்களால் விரட்டப்படுவதால், தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : hometown ,minister ,BJP , In his hometown, the loser has no right to live, the Union BJP minister said
× RELATED அரசின் திட்டங்களை பட்டியலிட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி..!!