×

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-மாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை: அமைச்சர் காமராஜ் பேட்டி

சென்னை: நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர் என்றும் தெரிவித்தார். ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருக்கக்கூடாது என்று உத்தரவு உள்ளது. ஈரப்பதம் இருந்தாலும் உடனே நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பப்படுகிறது என்றார்.


Tags : Government ,Tamil Nadu ,Kamaraj , Government of Tamil Nadu recommends raising the moisture content of paddy procurement from 17% to 22%: Minister Kamaraj Interview
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...