×

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் : ஜே.பி.நட்டா பேச்சு

கொல்கத்தா, :குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ)  கீழ், இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள்  ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்  சட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும்  இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள்  நடந்தன. கொரோனா பரவல் காரணமாக ஆங்காங்கே நடந்த போராட்டங்கள்  ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று கொல்கத்தா சென்ற பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அங்கு நடந்த கூட்டத்தில் பேசுகையில், ‘கொரோனா தொற்றுநோய் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்படுத்தப்படுவது தாமதமாகி வருகிறது. தற்போது நிலைமை மேம்பட்டு வருவதால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகள் உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசு, தனது கட்சியின் நலனுக்காக மாநிலத்தில் பிரித்தாளும் அரசியல் செய்து வருகிறது. ஆனால், பாஜக அனைவரின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது’ என்றார்.

Tags : JP Natta , குடியுரிமை ,திருத்தச் சட்டம்,ஜே.பி.நட்டா ,பேச்சு
× RELATED திருச்சியில் இன்று நடைபெற இருந்த...