×

மாஸ்க் மூலம் கலர்புல் உடை: மாஸ் காட்டிய திருநங்கை : சிந்திக்க வைத்தது கொரோனா

அம்பத்தூர், :சென்னையை சேர்ந்த திருநங்கையான பேஷன் டிசைனர், மாஸ்க் மூலம் தயாரித்த ஆடை அணிந்து மாஸ் காட்டிய வீடியோ, வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையை சேர்ந்த திருநங்கை பிரஸ்ஸி. இவர் அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப்டிசைனில் உதவி பேராசிரியராக உள்ளார். ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்ற இவர், திருநங்கைகளால் ஃபேஷன் உலகிலும் சிறந்து விளங்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். இவர் பல திருநங்கைகளுக்கு ஆன்லைனில் ஃபேஷன் வகுப்புகளை எடுத்து வருகிறார்.

டிசைனின் உச்சமாக பிரஸ்ஸி, முகக்கவசத்தால் ஆன ஆடையை வடிவமைத்து அசத்தியுள்ளார். கொரோனா பரவுவதை தடுக்க முக கவசம் இன்றியமையாத பொருளாக மாறியுள்ளது. இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதை கொண்டே ஆடை தயாரித்துள்ளார் இந்த திருநங்கை. அடுத்தமாதம் 14ம் தேதி, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த முக கவச ஆடையை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து பிரஸ்ஸி கூறியதாவது;சமூக வலைதளங்களில் கொரோனா காலத்தில் வெளியான வரும்காலங்களில் “மாஸ்க்கே டரெஸ்ஸாக மாறிடும் போலயே” என்ற மீம்ஸ் பலரை சிரிக்கவைத்தாலுமம் அது என்னை சிந்திக்கவும் யோசிக்கவும் வைத்தது. ஆடை வடிவமைப்பு துறையை சார்ந்த நான், ஏன் அதனை செய்து காட்டக்கூடாது என எண்ணி 100க்கும் அதிகமான மாஸ்க்குகளை கொண்டு ஓரிரு நாளில் மாஸ் உடையை தயாரித்தேன். இதை தயாரிக்க  2500 ரூபாய் செலவானது. இதன்மூலம், தன்னை போன்ற திருநங்கைகளும் அவரவர் துறைகளில் தங்களால் முடிந்த சாதனைகளை மேற்கொண்டு தங்களது சமூகத்துக்கு பெருமை சேர்க்கவேண்டும். இதனால் மாஸ் உடையை நானே உடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். இவ்வாறு கூறினார்.

Tags : Mask: Transgender ,Thought Corona , Mask, Colorful, Style, Mass, Transgender
× RELATED மாஸ்க் மூலம் கலர்புல் உடை: மாஸ்...