×

சிவன்மலை கோயிலுக்கு சொந்தமான 2 பேருந்துகள் ஏலம் விடப்படும்: உதவி ஆணையர் தகவல்

காங்கயம்: சிவன் மலை அடிவாரத்தில் காலாவதியாகி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2 பேருந்துகள் ஏலம் விடப்படும் என கோயில் உதவி ஆணையர் தெரிவித்தார். காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக் கோயில் உள்ளது. இந்த மலைக் கோயிலுக்குச் செல்வதற்கு சுமார் 800 படிக்கட்டுக்கள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையும் உள்ளன. கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்வதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் 2 பேருந்துகள் பல வருடங்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த 2 பேருந்துகளும் பழையதாகி, இயக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து 2 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அவை இயக்கப்பட்டு வருகின்றன. இயக்க முடியாத நிலையில் உள்ள 2 காலாவதியான பேருந்துகள் அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடிவாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள காலாவதியான 2 பேருந்துகளும் கொரோனா ஊரடங்கு காரணமாக இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இதனை இயக்குவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆர்வலர் ஒருவர் தவறாக பதிவிட்டார். இது காங்கயம் சுற்று வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து சிவன்மலை முருகன் கோயிலின் உதவி ஆணையர் முல்லை கூறுகையில், ‘இயக்க முடியாத நிலையில் உள்ள 2 பேருந்துகளைத்தான் கோயில் அடிவாரத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். அது தெரியாமல் தவறான தகவலை சமூக வலைதளங்கில் பரப்பி வருகின்றனர். விரைவில் அந்த 2 பேருந்துகளையும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Sivanmalai, Buses, Auctions
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன