×

சாலையை கடக்க முடியாமல் தவித்த விஷபாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் 60 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதியில் பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. இது மட்டுமின்றி மலைப்பாம்பு, ராஜ நாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் சில சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகிறது. இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் பகுதியில் சாலையோரத்தில் அரிய கொடிய விஷமுள்ள பாம்புகளின் வகையை சேர்ந்த மலபார் பிட் வைப்பர் பாம்பு ஒன்று சாலையை கடக்க முடியாமல் தவித்து வந்தது.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு அதிகாரி மோகன் சாலையோரத்தில் இருந்த பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார். மீட்கப்பட்ட பாம்பு குறித்து வன உயிர் ஆர்வலர் கூறுகையில், இவ்வகையான பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் வாழக்கூடியவை. எளிதில் பார்க்க முடியாத வகையை சேர்ந்த மலபார் பிட் வைப்பர் பாம்பாகும். வாகனங்களில் அடிபட்டு இறப்பதற்குள் தீயணைப்பு அதிகாரி அதை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Tags : fire department ,road , Fire Department, Snake
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே கோழி...