×

கொரோனா பாதிப்பால் செட்டிநாடு பலகாரம் விற்பனை மந்தம்

காரைக்குடி: காரைக்குடி அருகே கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக செட்டிநாட்டு பலகாரங்கள் தயார் செய்கின்றனர். தீபாவளி பண்டிகைகளுக்கு பலகாரங்கள் செய்யப்பட்டு மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேன் குழல் முறுக்கு, கைசுற்று முறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை,  அதிரசம், என 50 வகையான பலகாரங்கள் தயார் செய்யப்படுகிறன. பலகாரங்கள் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு என ஆடர்கள் அதிகளவில் வரும். இந்த ஆண்டு இதுவரை வியாபாரம் இல்லை. எப்படி வியாபாரம் இருக்கும் என தெரியவில்லை. அனைத்து செட்டிநாட்டு பாலகாரங்களுடன் சேர்த்து தீபாவளிக்கு என லட்டு, மைசூர்பாகு, பாதுசா ஆகியவை செய்வோம். இந்த ஆண்டு என்ன செய்வது என தெரியவில்லை. கொரோனா பாதிப்பால் 6 மாதமாக வியாபாரம் இல்லை. தொழிலாளர்களும் வரமுடியாத நிலை உள்ளது.

கைபக்குவத்துடன் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு இங்கிருந்து அதிகளவில் வாங்கி செல்வார்கள் என்றனர்.

Tags : Chettinad , Corona, Chettinad, Balakaram
× RELATED மாநகரில் 4வது கட்டமாக கொரோனா...