×

நாகை அருகே கஞ்சா புகைக்கும் சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ

கொள்ளிடம்: நாகை அருகே சிறுவர்கள் கஞ்சா புகைக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால்சாமியம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கஞ்சாவை எடுத்து பயன்படுத்தி அதனை புகைக்கும் காட்சியும், கஞ்சா பொட்டலம் வாங்கி பிரித்து அதனை கையில் வைத்து தூளாக்கி பயன்படுத்தும் காட்சியும், சிறுவர்கள் வட்ட வடிவில் அமர்ந்து அதன் நடுவே செல்போன்களையும் வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கொள்ளிடம் பகுதியில் கஞ்சா பயன்படுத்துவது இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது கஞ்சா பயன்படுத்தும் இந்த வீடியோ வைரலாக வருவதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Boys ,Naga , Nagai, cannabis
× RELATED காவிரியாற்றில் மாயமான சிறுவர்களை தேடும் பணி கைவிடல்