×

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.03 கோடியாக உயர்வு; 72,652 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 4,06,29,806 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,03,39,832 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 22 ஆயிரத்து 734 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 91 லட்சத்து 67 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 72 ஆயிரத்து 652 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 84,51,159, உயிரிழப்பு - 2,25,198, குணமடைந்தோர் - 54,95,453
இந்தியா       -    பாதிப்பு - 75,94,736, உயிரிழப்பு - 1,15,236, குணமடைந்தோர் - 67,30,617
பிரேசில்       -    பாதிப்பு - 52,51,127, உயிரிழப்பு - 1,54,226, குணமடைந்தோர் -  46,81,659
ரஷியா        -    பாதிப்பு - 14,15,316, உயிரிழப்பு -   24,366, குணமடைந்தோர்  - 10,75,904
ஸ்பெயின்    -     பாதிப்பு -  10,15,795, உயிரிழப்பு -  33,992

Tags : World, corona, healed, number, rise
× RELATED தேர்தலை முன்னிட்டு நேற்று...