×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை லேசாக வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் மேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்தது. லேசான மழை என்றாலும் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரத்தில் காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஏற்கனவே ரயில்வே சாலை. இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேடு பள்ளமான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில் மீண்டும் இந்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி அப்பகுதி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

செய்யூர்: செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் விவசாய பகுதிகளாக மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை முதல் மிதமான மழை வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு மழையும் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள மேற்படிப்பு பகுதிகளில் மழைநீர் கணிசமாக நிரம்பி வருகிறது. செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பவுஞ்சூர், கடப்பாக்கம், சூனாம்பேடு ஆகிய பகுதிகளில் நேற்று பகலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு மிகுந்த ஆர்வத்துடன் விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Kanchipuram ,Chengalpattu ,districts , Moderate rain in Kanchipuram and Chengalpattu districts
× RELATED காஞ்சிபுரம், பெரும்புதூர் தொகுதிகளில் 2.10 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு