×

வள்ளுவர் கல்லூரி சார்பில் TEDx காணொலி நிகழ்ச்சி

சென்னை: அமெரிக்காவின் புகழ் வாய்ந்த TEDx நிறுவனம் கரூர் வள்ளுவர்  கல்லூரிக்கு காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சிகளை நடத்த அங்கீகாரம் வழங்கி உள்ளது. உலகளாவிய காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்துவதற்காக  பிரத்யேகமாக `COUNTDOWN’ என்ற சிறப்பு நிகழ்வை இந்த முறை ஏற்பாடு செய்ய TEDx நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி உயர்ந்த நோக்குடன் இயற்கை பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட சமூக ஆர்வலர்களை பேச அழைக்கும் வகையில் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை மேம்படுத்த காவிரி டெல்டா உழவர்  சங்கத்துடன் இணைந்து பல்வேறு ஆறு, ஏரிகளை சுத்தம் செய்தல், வறட்சி நீக்குதல் மற்றும் ஆழப்படுத்துவதற்கான முக்கியமான திட்டங்களை வங்கி செய்துள்ளது. இது விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நிலத்தடி நீர் மட்டங்களை உயர்த்துவதற்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்” இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags : TEDx ,Valluvar College , TEDx video show on behalf of Valluvar College
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...