×

ரத்த தான முகாம்

செங்கல்பட்டு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், செங்கல்பட்டு திருமணி எம்ஜிஆர் நகர் மாசிலாமணி ஆரம்பப்பள்ளியில் ரத்ததான முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சரண்யா, ஒருங்கிணைப்பாளர் சசிகலா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இம்முகாமில் பங்கேற்றனர். இவர்கள் 50 பேரிடம் 50 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்றனர்.


Tags : Blood Donation Camp , Blood Donation Camp
× RELATED ரத்த தான முகாம், பிளாஸ்மா தானம்.....