×

கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு சம்பளம் பிடித்தம்: காவல்துறையினர் கொதிப்பு

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்ட போலீசார் மற்றும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுத்துக்கொண்ட காவல்துறையினருக்கு அந்தக் காலத்தற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது காவல் துறையினரிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், செய்தியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக களத்தில் நின்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

முன்களப் பணியாளர்களாக தீரத்துடன் பணியாற்றி வந்த பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66க்கும் மேற்பட்ட காவல்துறையினரைச் சேர்ந்த சிறப்பு எஸ்ஐக்கள், எஸ்ஐக்கள், காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட காவல்துறையினருக்கு சம்பளம் பிடித்தம் செய்ப்பட்டுள்ளது காவல்துறையினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Salary favorite for Corona isolation period: Police rage
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப...