×

வங்கியில் கடனுதவி வழங்கும் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் எம்எஸ்எம்இ வியாபார கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிளை மேலாளர் சதீஷ் கொல்லு தலைமை தாங்கினார். விழாவில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சென்னை வடக்கு மண்டல துணை பொது மேலாளர் வி.பி.தாஸ், உதவி பொது மேலாளர் ராஜேஷ் பட்டா ஆகியோர் கலந்துகொண்டு வாடிக்கையாளருக்கு ரூ.3 கோடி எம்எஸ்எம்இ வியாபார கடனுதவி வழங்கினர். இதில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா பல்வேறு கிளை மேலாளர்கள் சொப்னா, வேணு, மதுசூதனன் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Bank Lending Ceremony , Bank Lending Ceremony
× RELATED மனைப்பிரிவு, கட்டிட அனுமதி...