×

பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் முகக்கவசம் அணியாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார் இலவசமாக முககவசம் வழங்கினர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி, போந்தவாக்கம், மேலக்கரமேனூர் ஆகிய பகுதிகளில் இருந்து, பொதுமக்கள் சைக்கிள் மற்றும் பைக்கில் வந்து அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்றும் காய்கறி, பால் ஆகியவைகளை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி எதிரே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையில் போக்குவரத்து  போலீசார் நேற்று முன்தினம் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது, அவர்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து,  வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கினர். மேலும், மீண்டும் முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.


Tags : public , Free mask for the general public
× RELATED சார்பதிவாளர் அலுவலகங்களில் மாஸ்க் அணியாதோருக்கு அனுமதி கிடையாது