×

பள்ளிகள் திறப்பு இப்போது இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை. பாடப் பகுதிகளை குறைப்பது தொடர்பாக முடிவுகள் எடுத்து 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில மாநிலங்களில் அக்டோபர் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனினும் இருப்பினும் நவம்பர் 11ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என்று அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்  கல்வித்துறையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைச் செயலாளர்  தீரஜ்குமார், ஆணையர் வெங்கடேஷ், இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.இதன்படி, பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தேதியை நிர்ணயம் செய்வது, தேர்வுக்கான பாடங்களை 40 சதவீதம் குறைப்பது, பள்ளிகள் எப்போது திறப்பது ஆகியவை குறித்து முடிவு செய்தல், இரண்டாம் கட்டமாக பாடப்புத்தகங்கள் வழங்குவது, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பிறகு நேற்று மாலை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. பள்ளிகள் திறப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும். அது குறித்து முதல்வர் அறிவிப்பார். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்க பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாடத் திட்டங்களை குறைப்பதற்கான புளூ பிரின்ட், மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து 10 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

எனவே தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு அல்லது நவம்பர் டிசம்பர் முதல்வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் முதல்வருடன் ஊரடங்கு குறித்து மருத்துவ வல்லுனர்கள் குழு இந்த மாத இறுதியில் ஆலோசனை நடத்தும். அதன் பிறகே முதல்வர் பள்ளிகள் திறப்பது குறித்த உறுதியான முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Schools , Schools not open now: Minister plans
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...