தமிழகத்தில் 7 ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு 3,536 ஆக குறைந்தது: சுகாதார துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரேநாளில் 3,536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 6,90,936 ஆக உயர்ந்துள்ளது.  தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 83,625  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 3,536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 885 பேர், செங்கல்பட்டு 241, கோவை 290, சேலம் 192, திருவள்ளூர் 172, திருப்பூர் 140 என தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் மட்டும் 3 இலக்கத்தில் தொற்று பதிவானது. மற்றபடி தமிழகம் முழுவதும் 2 இலக்கத்தில் தான் தொற்று பதிவானது. இதனால் முதல்முறையாக நேற்று 3,536 பேருக்கு மட்டுமே நேற்று தொற்று உறுதியானது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 216 ஆண்கள், 2 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4,515  பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 6 லட்சத்து 42 ஆயிரத்து 152  பேர் குணமடைந்துள்ளனர். 38 ஆயிரத்து 93 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,691 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 25ம் தேதி 6,988 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இப்போது 3,536 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களாக குறைந்து வரும் வைரஸ் தாக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10ம் தேதி 5,234 பேர், 11ம் தேதி 5,015 பேர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 12ம் தேதி முதல் 4,876 பேர், 13ம் தேதி 4,666 பேர், 14ம் தேதி 4,462, 15ம் தேதி 4,410, 16ம் தேதி 4,389, 17ம் தேதி 4,295 பேர் என 5 ஆயிரத்துக்குள் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 4 ஆயிரத்துக்கு கீழ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி 18ம் தேதி 3,914 பேர், நேற்று 3,536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 10 நாட்களில் 1,700 க்கும் மேல் தொற்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் சென்ற தொற்று

செப். 21ம் தேதி    982 பேர்

செப். 22ம் தேதி    989 பேர்

செப். 23ம் ேததி    980 பேர்

செப். 24ம் தேதி    1,089 பேர்

செப். 25ம் தேதி    1,193 பேர்

செப். 26ம் தேதி    1,187 பேர்

செப். 27ம் தேதி    1,280 பேர்

நேற்று முன்தினம் 1,036 பேர் என ஆயிரத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் அதாவது 25 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>