×

திருப்பதியில் பரபரப்பு இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்கக்கோரி போராட்டம்

திருமலை: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 3,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வந்ததால், இலவச தரிசன டிக்கெட் வழங்குவது சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு ரூ.300 விரைவு தரிசனம் உட்பட கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தின் முன்பு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் பாஜவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலையில் பஜனைகள் செய்தும், படுத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் சாதாரண பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது நடந்து வரும் நவராத்திரி பிரமோற்சவத்தில் கட்டண தரிசனத்தில் உள்ள பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, சாதாரண பக்தர்களும் இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

Tags : devotees ,Tirupati , Struggle to allow devotees in Tirupati free darshan
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்