×

உலகளவில் கொரோனா பாதிப்பு 4 கோடி

புதுடெல்லி: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. தற்போது உலக அளவில் மொத்த பாதிப்பு 4 கோடியை நேற்று தாண்டியது. மொத்த பாதிப்பு 4 கோடியே 234 ஆகவும், மொத்த பலி 11 லட்சத்து 13 ஆயிரத்து 896 ஆகவும் உள்ளது. உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ள அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 81 லட்சத்து 54,935 ஆகவும், இந்தியாவில் 75 லட்சத்து 50,273 ஆகவும், பிரேசிலில் 52 லட்சத்து 35,344 ஆகவும் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,722 பேர் புதிதாக பாதித்துள்ளனர். 579 பேர் பலியாகி மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் பலி எண்ணிக்கை 600க்கும் குறைவாக பதிவாகி உள்ளது.

Tags : Globally the corona impact is 4 crore
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்