×

முதற்கட்ட ஆய்வில் உறுதி கொரோனாவை குணமாக்கும் புதிய சித்தா மருந்து அறிமுகம்: அருப்புக்கோட்டை ஜிஹெச்சில் தர அரசு அனுமதி

விருதுநகர்: கொரோனாவை குணப்படுத்த எம்.வி.கசாயம் என்ற புதிய சித்த மருந்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்க அரசு அனுமதித்துள்ளது என விருதுநகர் கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சித்த மருந்தான எம்.வி.கசாயம் மூலம் சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ளது. எம்.வி.கசாயம் கொரோனாவை குணப்படுத்தும் தன்மை உடையது என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது வைரஸை மனித உடலில் வளர்ச்சி அடையாமல் தடுக்கும்.

காய்ச்சல், உடல்வலி, அலர்ஜி, சுவாச நோய்கள், அல்சர், வயிற்றுப்போக்கு, புற்றுநோயை குணப்படுத்தும். ஈரலை காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 3 முதல் 6 நாட்கள் உட்கொண்டால் நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம். ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு மூச்சுத்திணறல், மாரடைப்பு வராமல் தடுக்கும். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் சித்த மருந்து மூலம் சிகிச்சை வழங்கி, சிகிச்சைக்கு பின் மறுபரிசோதனை செய்யப்படும். சிகிச்சை பெற விருப்பம் உள்ளவர்கள் கொரோனா பாசிட்டிவ் சான்றிதழை கொடுத்து சிகிச்சை பெறலாம். சிகிச்சை முற்றிலும் இலவசம். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ டாக்டர் தருமராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர் அளிக்க உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : introduction ,Siddha ,Government , Preliminary study confirms introduction of new Siddha drug to cure corona
× RELATED நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி...