×

தொடர் முகூர்த்தம், தசராவால் வாழை இலை விலை திடீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை: தொடர் முகூர்த்தம் மற்றும் தசரா பண்டிகை காரணமாக வாழை இலை விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு கட்டு ரூ.600 வரை விற்பனையானது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வருவாய் இழந்த தொழில்களில் வாழை விவசாயமும் ஒன்று. முழு ஊரடங்கு காலத்தில் வாழை இலை மற்றும் வாழைக்காய், வாழைப்பழம் போன்றவைகளின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விளைச்சலாகும் வாழை இலை, காய் போன்றவைகளை சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் போக்குவரத்து நடைமுறை சிக்கல் ஏற்பட்டதால் இவற்றிற்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டனர்.

 உள் மாவட்ட அளவில் ஆங்காங்கே மினி சரக்கு வாகனங்களில் இவற்றை ெகாண்டு வந்து ஆங்காங்கே கடைவிரித்து விற்பனை செய்தனர். அதனால் விலையும் குறைந்தது. 5 இலை கொண்ட ஒரு அடுக்கு ரூ.10 என்ற விலையில் இருந்து நீண்ட நாட்களாக உயராமல் இருந்தது. மொத்த விற்பனை விலையில் 150 எண்ணம் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.150 முதல் 200க்கு விற்றாலும் வாங்க ஆள் இல்ாலமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதால் மீண்டும் வாழைக்காய், வாழை இலை போன்றவைகள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.

உணவகங்களும் முழுஅளவில் செயல்படுவதால் வாழைஇலை தேவை அதிகரித்துள்ளனர். மேலும் தற்போது ஐப்பசி மாதம் தொடங்கியதும் முகூர்த்தங்கள் அதிகரித்துள்ளதால் வாழை இலை தேவை மேலும் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் சற்று விலை உயர்ந்தது. அதாவது 5 இலை 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களாக முகூர்த்த தினம் என்பதால் 5 இலை 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. திருமணம் போன்ற அனைத்து சுபநிகழ்ச்சிகளும் தற்போது வழக்கம் போல் திருமண மண்டபங்களில் நடக்கத் தொடங்கவிட்டன. மேலும் தசரா பண்டிகையும் நடைபெறுகிறது.

10 நாட்கள் விரதம் மேற்கொள்பவர்கள் வாழை இலையை பயன்படுத்துகின்றனர். இதனால் 150 இலை கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.600 வரை இடங்களுக்கு ஏற்ப எகிறியது. சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் வாழை இலைக்கு நல்ல விலை கிடைப்பதால் இதனை விளைவிக்கும் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Dasara , Banana leaf prices rise sharply: Farmers happy
× RELATED தாஸா புரந்தரதாஸா