ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

அபுதாபி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.

இரு அணிகளும் வாழ்வா-சாவா நிலையில் வெற்றிக்கு போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என கூறப்படுகிறது. இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் சென்னை 14, ராஜஸ்தான் 8ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் செப்.22ம் தேதி மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 16 ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>