×

சித்த, ஆயுர்வேத சிகிச்சை பெற 90 நாட்கள் விடுப்பு வழங்குமாறு நளினி தமிழக உள்துறைக்கு கோரிக்கை

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தமிழக உள்துறைக்குமனு ஒன்றை அளித்துள்ளார். அதில்; ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்க கூடிய நளினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி தனக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதன் காரணமாக உடனடியாக 90 நாட்கள் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழக உள்துறைக்கு கடந்த 10-ம் தேதி மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் முக்கியமாக கண் புரை நோய், பல் வலி, ரத்த சோகை என பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து அதற்கு தேவையான சிகிச்சை சிறையில் முழுமையான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சை தேவைப்படுவதால் 90 நாட்கள் சிறையில் இருந்து விடுப்பு அளிக்கும்படியும், அதற்கு தமிழக என்று கோரிக்கை வைத்து நளினி தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் புகழேந்திக்கும் சிறைத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ தேவை என்பதன் அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்குவதும் தாமதம் ஏற்பட்டால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி வழக்காக தொடர்ந்து அதில் நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவ சேவை என்ற அடிப்படையின் காரணமாக அவருக்கு பரோல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.


Tags : Nalini ,Tamil Nadu ,Home Ministry ,Siddha , Nalini requests the Tamil Nadu Home Ministry to grant 90 days leave for Siddha and Ayurvedic treatment
× RELATED முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்க்கு...