×

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.!!!

சென்னை: நவம்பர் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தமாவோம் என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய, மாநில  தொழிற்சங்கங்களின் கலந்தாய்வுக் கூட்டம் 17-10-2020 நேற்று முன்தினம் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி தலைமையில்  சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நவம்பர் 26-ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட  அறிக்கையில்,

மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலுக்கிணங்க, தமிழகத்தில் நவம்பர் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தை மிகச் சிறப்பாக நடத்துவது என கூட்டம் முடிவு செய்தது. வேலை  நிறுத்தத்தின் கோரிக்கைகள்:

* வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், மாதம் ரூ.7500 வீதம் நிவாணர தொகை வழங்க வேண்டும்.
* ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும்.

* மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள் வேலையாக உயர்த்தி, நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து, அதில் வழங்கப்படும் குறைந்தப்பட்ச கூலியை  அதிகரிக்க வேண்டும்.
* வங்கி காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய படுத்தவதை நிறுத்த வேண்டும்; ரயில்வே , பாதுகாப்புத்துறை தொழிற் சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத்துறை  நிறுவனங்களை கார்ப்பரேட்டாக மாற்றுவதைக் கைவிட வேண்டும்.
*  அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் உரிய வயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

* அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்;  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டப்படி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்; பிராவிடண்ட் பண்டுடன் இணைந்த  EPS-95 ஓய்வூதியத்தை அதிகரித்து மேம்படுத்த வேண்டும். ஆகிய ஏழு கோரிக்கைகளை இந்த பொது வேலை நிறுத்தத்திற்காக, மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.


Tags : strike ,trade union federation , General strike on November 26 emphasizing 7 point demands: All trade union meeting announcement. !!!
× RELATED ஊட்டி எல்லையை விரிவுபடுத்தக்கோரி...