மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சிலிருந்து காக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? :ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவருக்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்

சென்னை : மாட்டுச்சாண சிப் செல்போன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்டு 600 விஞ்ஞானிகள் ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்பது மத்திய அரசின் வேளாண் துறையின் கீழ் இயங்கும் பிரிவு. மாட்டின் பால் பொருள்கள் தவிர்த்து மாட்டுச்சாணம், சிறுநீர் ஆகியவற்றையும் சந்தைப்படுத்த நினைக்கும் மத்திய அரசு, இந்தப் பிரிவை உருவாக்கியிருக்கிறது. இதன் தலைவராக வல்லபாய் கத்திரியா (Vallabhbhai Kathiria) உள்ளார்.

வல்லபாய் கத்திரியா, சில தினங்களுக்கு முன்பு மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.. இந்த சிப் செல்போன்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் குறைக்கும் என்றும், நோய்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான கல்வியாளர்கள் கூட்டாக ராஷ்டிரிய காம்தேனு ஆயோக்கின் தலைவரான வல்லபாய் கதிரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அக்கடிதத்தில் மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது குறித்து எத்தனை பேரிடம், எங்கு, எப்போது பரிசோதனை நடத்தப்பட்டது என ஆதாரம் கேட்டுள்ளனர். மேலும் இந்த சிப்பை உருவாக்கிய முதன்மை புலனாய்வாளர்கள் போன்ற விவரங்களையும் கேட்டுள்ளனர்.கண்டுபிடிப்புகள் எங்கு வெளியிடப்பட்டன? தரவு மற்றும் சோதனை விவரங்களை வழங்க முடியுமா என்றும் கடிதத்தில் விஞ்ஞானிகள் கேட்டுள்ளனர்.

Related Stories:

>