×

ஒரு பைசாவுக்கு 2 பிளேட் பிரியாணி: சீர்காழியில் அலைமோதிய கூட்டம்

சீர்காழி: சீர்காழியில் ஒரு பைசாவுக்கு இரண்டு பிளேட் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நாகை மாவட்டம் சீர்காழி கால்நடை மருத்துவமனை எதிரே புதிய ரெஸ்டாரண்ட் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு செல்லாத ஒரு பைசாவுக்கு இரண்டு பிளேட் பிரியாணியும், 2, 3, 5, 10, 20 பைசாவுக்கு ஒரு பிளேட் பிரியாணியும், காவலர், மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக ஒருபிளேட் பிரியாணியும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அறிந்த பிரியாணி பிரியர்கள் கடை முன் கூட்டம் கூட்டமாக திரண்டனர். கூட்டம் அலை மோதியதால் போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் முண்டியடித்து கொண்டு பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் திரண்டவர்களை போலீசாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரியாணி வாங்க திரண்ட கூட்டத்தை பார்த்தவாறு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 2 பேர் சாலையில் நிலை தடுமாறி விழுந்து காயத்துடன் எழுந்து சென்றனர்.

Tags : penny ,Wave ,Sirkazhi , Biryani, Sirkazhi
× RELATED ஒரு பைசா கூட நான் லஞ்சம் வாங்கவில்லை......