திருவில்லி. கோயில் திருவிழாவில் புலி வேஷம் போட்டு பற்களால் ஆட்டை தூக்கி வீசிய வாலிபர்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் புலி வேஷம் போட்ட வாலிபர் ஆட்டை பற்களால் தூக்கி வீசினார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பெருமாள்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். பொங்கல் திருநாளை முன்னிட்டு பத்திரகாளியம்மன் தினமும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார், வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக முளைப்பாரி திருவிழா மற்றும் பற்களால் ஆட்டை தூக்கி நான்கு திசைகளை நோக்கி வீசும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வு நேற்று முன்தினம் இரவு கோயில் அருகே உள்ள மைதானத்தில் நடந்தது. புலி வேஷம் போட்ட வாலிபர் 10 கிலோ எடையுள்ள ஆட்டுக்குட்டியை பற்களால் தூக்கி கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு திசைகளை நோக்கி வீசினார். மேலும் புலி வேஷம் போட்ட வாலிபர் பற்களால் ஆட்டுக்குட்டியை தூக்கியபடியே மைதானத்தில் சுற்றி வந்தார்.

Related Stories:

>