×

பொன்மலை ஜி.கார்னர் மொத்த சந்தையில் தார்ப்பாயால் மூடிய காய்கறிகளை தின்று சேதப்படுத்தும் கால்நடைகள்

திருச்சி: பொன்மலை ஜி.கார்னரில் மொத்த சந்தையில் மழையால் வீணாகும் காய்கறிகளால் வியாபாரிகளுக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்படுகிறது. இதில் வியாபாரிகள் தார்ப்பாய் போட்டு கட்டி மூடி வைத்துள்ள காய்கறிகளை கால்நடைகள் தின்றும், சேதப்படுத்தியும் செல்வதால் வேதனை அடைகின்றனர். பொன்மலை ஜி.கார்னர் மைதானம் திறந்த வெளியில் இருப்பதால், அவ்வப்போது மழை பெய்யும் போது மார்க்கெட் முழுவதும் மைதானம் மழைநீரில் மிதக்கிறது. இதில் வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகள் நனைத்து வீணாகிறது. இதனால் மழையின்போது வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

மேலும் வியாபாரம் முடிந்து காலையில் வீட்டுக்கு செல்லும் வியாபாரிகள் மீதமுள்ள காய்கறி மூட்டைகளை வீட்டுக்கு எடுத்து செல்வார்கள். பலர் அங்கேயே தார்ப்பாய் போட்டு கட்டி வைத்து செல்கின்றனர். திறந்தவெளியாக இருப்பதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் புகுந்து வியாபாரிகள் கட்டி வைத்துள்ள தார்ப்பாய்களை சேதப்படுத்தி காய்கறிகளை தின்றுவிடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இனி மழைக்காலம் என்பதால் இந்த மைதானத்தில் வியாபாரம் செய்வது மிகவும் சிரமம். எனவே ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ள நிலையில் காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Ponmalai, vegetable
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...