×

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 88.26% ஆக உயர்வு.. தினசரி பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்தது : மத்திய அரசு அறிக்கை!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 75.50 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 55,722 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  75,50,273 ஆக உயர்ந்தது.
* புதிதாக 579 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,610 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 66,399 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 66,63,608 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,72,055 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 88.26% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 10.23% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில்  8,59,786 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 9,50,83,976 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.


Tags : Corona ,India , India, corona, recovery rate, mortality
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...