×

தேனியில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸாருக்கு அனுமதி மறுப்பு : ஜனநாயக சட்டவிரோத செயல் என கே.எஸ்.அழகிரி கண்டனம்

தேனி : தேனி-போடி சாலையில் இன்றுகாலை நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க
 காங்கிரஸ் கொடியுடன் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று காலை 10 மணியளவில் தேனி - போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இத்தகைய ஜனநாயக சட்டவிரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினரை எச்சரிக்கிறேன்.

எனவே, மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அமைதியான முறையில் சட்ட ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நடத்துகிற விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தும்படி தமிழக தலைமை காவல்துறை அதிகாரி திரு ஜே.கே.திரிபாதி அவர்களையும், தமிழக உள்த்துறை செயலாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : KS Alagiri ,Congress ,meeting ,Theni , Theni, Farmers, Congress, Democratic Illegal, KS Alagiri, Condemnation
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்