×

சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் குற்றச்சாட்டு

காஷ்மீர், :ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று, ஜம்மு - காஷ்மீர் பாஜக தலைவர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது  அரசியல் சாசன சட்டத்தை, சட்டத்திற்கு புறம்பாக நீக்கிய முடிவை, மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.  

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலை நிறுத்தவும், ஜம்மு - காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, ஜம்மு - காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம்‘ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் பிரிவுத் தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில், ‘சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறுகின்ற ப.சிதம்பரத்துக்கு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம்.  இதேபோல், திக்விஜய் சிங்கும் பேசியுள்ளார். இவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அனுமதித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : ISI ,Naxals ,P. Chidambaram ,BJP ,Jammu and Kashmir , Special status, cancellation, P. Chidambaram, ISI, Naxals, Jammu and Kashmir, BJP leader, accused
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...