×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொன்னேரி: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இணையவழி உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு  ஆலோசனைப்படி,  மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் ரமேஷ்ராஜ்  ஏற்பாட்டில் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று  நடைபெற்றது.

இதில், சிறுவாக்கம், வன்னிப்பாக்கம், நாலூர்,  அனுப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் திமுகவில் இணைந்தனர். மேலும், வல்லூர் தமிழரசன், ராஜா, பாளையம், பரிமளம், ஜெயா, முரளி, அனுப்பம்பட்டு மணி, சகாதேவன், ப.தமிழரசன். கு.லோகநாதன், ரமேஷ், திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,Admission Camp , DMK Member Admission Camp
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்