×

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அப்துல் கலாம் விருது

காஞ்சிபுரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்தநாளில் பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு காஞ்சி முத்தமிழ் மையத்தின் சார்பில் ராமேஷ்வரம் நகரில் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதானது கிராமப்புற மாணவர்களின் உயர்வுக்காக பணியாற்றிய காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் தி.சேகர், காவாந்தண்டலம் பள்ளி ஆசிரியர் ப.சரவணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை திரைப்பட நடிகர் தாமு, முத்தமிழ் மையத்தின் நிறுவனர் லாரன்ஸ் ஆகியோர் வழங்கினர். அதேபோன்று ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும் சேலம் சக்தி கைலாஷ் பெண்கள் கல்லூரியும் இணைந்து சேலத்தில் நடத்திய அறிவியல் செயல்திட்டம் சமர்ப்பித்தல் போட்டியில் காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் பள்ளி மாணவர் தருண்பிரசாத் பங்கேற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று இளம் விஞ்ஞானி விருது -2020. மற்றும் பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகையும் பெற்றார்.

Tags : Government School Teachers , Abdul Kalam Award for Government School Teachers
× RELATED அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு...